search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டார் இந்தியா"

    இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பார்த்து ரசிக்க ஜியோ புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. #Jio



    ஸ்டார் இந்தியாவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு இருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டார் மூலம் பயனர்கள் இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

    ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின் படி டி20, சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் பிரீமியர் தொடர்களை ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம்.

    முன்னதாக இந்தியாவிலேயே முதல் முறையாக இன்டராக்டிவ் ஸ்போர்ட் அனுபவத்தை ஜியோ டி.வி. செயலியில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கியது. இந்த சேவையை கொண்டு பயனர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்திற்கு திருப்பிக் கொள்வது, மைக் தேர்வு செய்வது மற்றும் போட்டிகளை பார்த்து ரசிக்க குறிப்பிட்ட மொழிகளில் ஒன்றை தேர்வு செய்வது போன்றவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

    இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது ஜியோ கிரிக்கெட் பிளே எனும் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியுடன் ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை கிரிக்கெட் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இத்துடன் கிரிக்கெட் தொடரின் போது இலவச ஆட்-ஆன் சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
    விராட் கோலி அப்செண்ட்-ஆல் வருமானம் போச்சு என்று கடிதம் எழுதிய ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது. #BCCI #StarIndia #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனும், உலகின் நட்சத்திர வீரரும் ஆன விராட் கோலி இந்த தொடரில் விளையாடவில்லை. இங்கிலாந்து மண்ணில் 84 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20, ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி விராட் கோலி அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்னும் கூடுதல் பலம் பெற்றிருக்கும். இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என ஸ்டார் இந்தியா திட்டமிட்டிருந்தது.



    விராட் கோலி ஓய்வால் தங்களது வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதிய ஸ்டார் இந்தியா போட்டியின் ஒருங்கிணைப்பாளரான ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு மெயில் அனுப்பியது. இந்த மெயில் பிசிசிஐ-க்கும் இணைக்கப்பட்டது. அந்த மெயிலில் ‘‘தலைசிறந்த வீரரான விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை என்பதை 15 நாட்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. இதனால் எங்களுக்க பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயில் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்தும். மேலும், ஒப்பந்தத்தின்போது சிறந்த தேசிய அணியை அனுப்பும் வகையில் வலியுறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பதில் அளித்துள்ளது. அதில் ‘‘இந்திய அணியின் தேர்வை ஒளிபரப்பும் நிறுவனம் முடிவு செய்ய முடியாது. எங்களுடைய தேசிய அணியை தேர்வு செய்வது பிசிசிஐ-யின் தனியுரிமையாகும். இதில் வெளியில் இருந்து எந்தவொரு குறுக்கிட்டையும் அனுமதிக்க முடியாது’’ என்று பதிலடி கொடுத்துள்ளது.
    ×